Tamil Language
-
தமிழ்மொழிப் பாடத்திட்டத்தின் வழி மாணவர்கள் : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களோடு இருவழிக் கருத்துப்பரிமாற்றத் திறன்களிலும் ஈடுபட பயிற்சி பெறுவர்.
-
கேட்டல்- கட்டளைகளைக் கவனமாகக் கேட்டு அதற்கேற்பச் செயல்படுதல், பேச்சுத்தமிழிலும் , எழுத்துத்தமிழிலும் அமைந்த பலவகையான பனுவல்களைக் கேட்டுத் தங்கள் புரிந்துணர்வை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வர்.
-
பேசுதல்- படம் பார்த்துப் பேசுதல், பொருள் காட்டிப் பேசுதல், பாகமேற்று நடித்தல், தொலைபேசியில் உரையாடுதல், விவாதம் செய்தல் வானொலி அறிவிப்புச் செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மாணவர்கள் பேசப் பயிற்சி பெறுவர்.
-
படித்தல்- தமிழ் எழுத்துகளை அடையாளங்கண்டு சரியாக உச்சரித்துப் படிக்கப் பயிற்சி பெறுவர். பல விதமான பனுவல்கள், கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிக்கப் பயிற்சி பெறுவர். மேலும் வாய்விட்டுப் படித்தல், வாய்க்குள் படித்தல், அகன்ற படிப்பு மற்றும் ஆழ்ந்து படிக்கவும் கற்றுக்கொள்வர்.
-
எழுதுதல்- தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதிப் பழகுவர். படித்த சொற்களையும் தொடர்களையும் நினைவுகூர்ந்து எழுதப் பயிற்சி பெறுவர். படம், படத்தொடர், சூழல் முதலியவற்றையொட்டிக் கதை அல்லது கட்டுரை எழுதும் திறனைப் பெறுவர்.
-
பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்- பொருத்தமான சொற்களையும் பலதரப்பட்ட வாக்கியங்களையும் பயன்படுத்தி, வகுப்பறைக் கலந்துரையாடல், பாகமேற்று நடித்தல், பேட்டிகள், வானொலிப் படைப்புப் போன்றவற்றின் மூலம் தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் செய்யக் கற்றுக்கொள்வர்.
-
எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம்- மின்னஞ்சல் எழுதுதல், பதிலுரை அனுப்புதல் , எழுத்துவழிக் கருத்துத் தெரிவித்தல், சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடல் போன்ற பல தரப்பட்ட எழுத்து வடிவங்களுக்கு மறுமொழி எழுதக் கற்றுக்கொள்வர்.
-
இன்றைய சூழலுக்கு ஏற்பத் தட்டச்சுப் பயிற்சியும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும்.
-
மாணவர்கள் மதிப்பு, பொறுப்புணர்வு, மீளும்தன்மை, நேர்மை, பரிவு, நல்லிணக்கம் முதலிய விழுமியங்களைப் பெற்று நல்ல பண்புநலன்களைக் கொண்ட குடிமக்களாகத் திகழவும் கற்றுக்கொள்வர்.